கடலூர் மாவட்டம் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ் பெக்டர் மகேஷ் தலைமையிலான காவல் துறையினர் புவனகிரி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக மேல் புவனகிரியை சேர்ந்தமூர்த்தி (வயது 55) என்பவரை கைது செய்த புவனகிரி காவல் துறையினர் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.