கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி சம்பத்குமார் தற்போது கடலூரில் வசித்து வருகிறார். ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வயல் வேலைக்காக 42 ஆயிரம் ரூபாயை பீரோவில் வைத்திருந்தார்.
ஆலப்பாக்கம் வீட்டிற்கு சம்பத்குமார் வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்த நிலையில் அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. இது பற்றி அவர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.