சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்ததால்
கிண்டல் செய்த நபரை சக நண்பர்கள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. சென்னை வேளச்சேரியில் மதுபோதையில் சக நண்பர்கள் தாக்கியதில் காயமடைந்த ஜீவரத்தினம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜீவரத்தினம் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை தாக்கிய 5 பேரை துரைப்பக்கம் போலீசார் கைது செய்தனர். 17 வருடங்களுக்கு பிறகு சென்னை மண்ணில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.