கர்நாடகா: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 உயிரிழக்க ஒரேநேரத்தில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்ததே காரணம் என அம்மாநில முதல்வர் சித்தராமையா விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, "எதிர்பார்த்த அளவை விட அதிகளவில் ரசிகர்கள் குவிந்தனர். சின்னசாமி மைதானத்தில் 35,000 பேர் மட்டுமே கூட முடியும். ஆனால், மைதானத்தின் வெளியே மட்டும் சுமார் 3 லட்சம் ரசிகர்கள் குவிந்திருந்தனர்" என்று கூறியுள்ளார்.