மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உல்வேயின் செக்டார் 24 பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் சோதனை நடத்தினர். போதைப்பொருளுடன் நைஜீரிய நபர் பிடிபட்டார். ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல போலீசார் அவரை கைது செய்தனர். அவர் சாலையை அடைந்தவுடன், போலீசார் அசந்த நேரத்தில் குற்றவாளி அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.