சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இளம் எம்.பி. பிரியா சரோஜை கிரிக்கெட் வீரர் ரிங்கு திருமணம் செய்யவுள்ளார். இந்த ஜோடிக்கு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ள நிலையில், வரும் ஜூன் 8ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ஒரு ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. இதில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். 26 வயதான பிரியா சரோஜ், 2024 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் மச்லிஷாஹர் தொகுதியில் வெற்றி பெற்றார்.