இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடிகையும், சோஷியல் மீடியா இன்புளுயன்சரான ஜாரா யெஸ்மினை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றனர். ஆனால், இது குறித்து உடனே விளக்கமளித்த ஜாரா, தங்களுக்குள் அப்படியான எந்த விஷயமும் இல்லை என உறுதிபட தெரிவித்துள்ளார். முன்னதாக சாஹல் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவிடம் இருந்து பிரிந்து விட்டார் என்ற தகவலும் வெளியானது. இருப்பினும் அதனை இருவருமே இன்னும் உறுதிப்படுத்தவில்லை.