இந்தியன் 2 படக்குழுவினருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

69பார்த்தது
இந்தியன் 2 படக்குழுவினருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் - 2 படக்குழுவுக்கு மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியன் - 2 திரைப்படத்துக்கு தடைக்கோரி வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். ‛இந்தியன்’ படத்துக்காக கமல்ஹாசனுக்கு வர்மக்கலையை ராஜேந்திரன் கற்று கொடுத்திருந்தார். ராஜேந்திரன் கற்று கொடுத்த முத்திரையை தடையில்லா சான்று பெறாமல் இந்தியன் -2வில் பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கமல் தரப்பு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி