ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை.. நீதிமன்றம் உத்தரவு

64பார்த்தது
ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை.. நீதிமன்றம் உத்தரவு
நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசைன் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்துள்ளார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, கொலை வழக்கின் விசாரணை நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். ஜாகீர் உசேன் கடந்த மார்ச் 18ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் பீர்முஹமது (37) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி