மும்பையில் உள்ள ஒரு அமர்வு நீதிமன்றம், கணவன் தனது மனைவியை துன்புறுத்தி வந்ததால், இழப்பீடு தொகையான ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ரூ.5 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து கணவர் மேல்முறையீடு செய்திருக்கிறார். அதனை விசாரித்த நீதிமன்றம், 20 ஆண்டுகளாக மனைவி, குழந்தையை கொடுமை செய்ததற்கு, ரூ.5 லட்சம் இழப்பீடு குறைவானது என கூறி ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளது. கணவர் மிகப்பெரிய பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.