மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலை முறையாக பராமரிக்காததால் எலியார்பத்தி, புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு வழக்கில், நீதிபதிகள் இவ்வாறு கூறியுள்ளனர். மேலும், இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து வரும் 18-ம் தேதி என்எச்ஏஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.