நாட்டுக்கோழி சாறு.. கர்ப்பிணிகளுக்கு நல்லது

562பார்த்தது
நாட்டுக்கோழி சாறு.. கர்ப்பிணிகளுக்கு நல்லது
நாட்டுக்கோழியை அம்மியில் நன்றாக நசுக்கி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய், மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், இடித்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இப்போது இடித்து வைத்த நாட்டுக்கோழியை சேர்த்து, மஞ்சள் பொடி, மல்லிதூள், கல் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். இதுவே நாட்டுக்கோழி இடிச்சச் சாறு. பொதுவாக குழந்தை பெற்ற பெண்களுக்குத்தான், இழந்த சத்துகளை மறுபடியும் பெறுவதற்காக நாட்டுக்கோழி செய்து தருவார்கள். ஆனால், இப்போதெல்லாம் கருத்தரித்தவுடனே, நாட்டுக்கோழி உணவுகளை சாப்பிட சொல்கிறார்கள். அந்த அளவுக்கு நாட்டுக்கோழி கர்ப்பிணிகளுக்கு நல்லது.

தொடர்புடைய செய்தி