அமெரிக்கா நடத்திய தாக்குதல் தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். பேச்சுவார்த்தை மூலமாகவும், தூதரக அளவிலும் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என மோடி வலியுறுத்தியுள்ளார். ஈரானுக்கு ஆதரவாக ஏமன், சவுதி அரேபியா, ரஷ்யா, சீனா, ஈராக், ஓமன் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மற்றொருபுறம் ஈரானுக்கு ஆதரவாக ஏமன் நாடு போரில் குதித்துள்ளது.