படகில் கிடந்த பெண்கள் சடலங்கள்- ஆடிப்போன அதிகாரிகள்

559பார்த்தது
படகில் கிடந்த பெண்கள் சடலங்கள்- ஆடிப்போன அதிகாரிகள்
ஸ்பெயின் நாட்டின் மத்திய தரைக்கடல் பகுதியில் நேற்று ஒரு படகு சந்தேகத்திற்கு இடமான முறையில் மிதந்து வந்துள்ளது. இதனைக் கண்ட கடற்படையினர் உடனே அங்கு சென்று பார்த்தபோது, அந்த படகில் உயிரிழந்தபடி 4 பெண்கள் சடலமாக கிடந்துள்ளனர். அவர்களை மீட்ட அதிகாரிகள் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவுகள் வந்த பிறகே அவர்கள் இறந்ததற்கான காரணம் தெரியவரும். ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து ஸ்பெயின் வர முயன்றபோது இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி