செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 55வது பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் கலந்துகொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று வீரியம் இல்லாதது. தமிழகத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவையில்லை. 2, 3 நாட்களில் அதுவே சரியாகிவிடும். இது குறித்து பொதுமக்களுக்கு எந்த ஒரு பதற்றமும், பயமும் தேவையில்லை” என்றார். நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு நேற்று (ஜூன் 19) மட்டும் 4 பேர் பலியாகி உள்ளனர்.