கொரோனா பரவல் காரணமாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் இருப்பதாக டீன் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழ்நாட்டில் 216 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 30 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு வார்டு தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.