கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் மத்திய சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், "ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள், படுக்கைகள், அத்தியாவசிய மருந்துகள் தடையின்றி கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் கூட்ட நெரிசலான பகுதிகளுக்கு செல்லவதை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள் உடல்நிலை மோசமடைந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.