கோடை விடுமுறை முடிந்து நாளை (ஜூன் 02) தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. கோடை வெயில் அதிகமாக இருந்தால் விடுமுறை நீட்டிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் வெயில் தணிந்தது. இதனிடையே நாடு முழுவதும் ஒருபுறம் கொரோனா பாதிப்பும் உயர்ந்து வருகிறது. அதே போல், கர்நாடகாவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.