கடந்த மே மாதம் முதல் இந்தியாவில் மீண்டும் பரவும் கொரோனா உயிர்களையும் பறித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணிநேரத்தில் 7 பேரின் உயிரை பறித்த கொரோனா 3 இளம் வயதினரையும் விட்டுவைக்கவில்லை. டெல்லியைச் சேர்ந்த 22 வயது பெண்மணி, மஹராஷ்ட்ராவைச் சேர்ந்த 23 வந்து பெண்மணி, 27 வயது ஆண் என மூவர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு நுரையீரல், சுவாச கோளாறு, நீரிழிவு நோய் போன்ற இணை நோய் இருந்துள்ளது.