இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,133ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 2 பேர், கேரளாவில் 3 பேர், தமிழ்நாட்டில் ஒருவர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.