நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், தற்போது சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,395 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கேரளாவில் 1,336, டெல்லியில் 375, கர்நாடகாவில் 234, மேற்கு வங்கத்தில் 205, தமிழ்நாட்டில் 185, தெலங்கானாவில் 3 மற்றும் ஆந்திராவில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.