நாடு முழுவதிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பாதிப்பு ஆசிய நாடுகளில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போதுவரை 1,009 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கேரளா 430, மகாராஷ்டிரா 209, டெல்லியில் 104, குஜராத் 83, தமிழ்நாடு 69, கர்நாடகா 47 பேர் என பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஏழு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.