ஹாங்காங், சிங்கப்பூரில் மீண்டும் அதிகரித்துள்ள கொரோனா தமிழ்நாட்டுக்குள்ளும் நுழைந்துள்ளது. ஆனால், வீரியம் இல்லாத கொரோனா பரவுவதால் பயம் தேவையில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சேலத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்த விஷயத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் & மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் வீண் வதந்தியை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.