சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு

65பார்த்தது
சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு
மத்திய அரசாங்கம் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை மீதான அடிப்படை சுங்க வரியை 20%-ல் இருந்து 10% குறைத்தது. உள்நாட்டு சுத்திகரிப்பு துறையை ஊக்கப்படுத்துவதற்காக கச்சா எண்ணெய் மீது சுங்கவரி குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உள்நாட்டில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் விலை குறைவாகவும், வெளிநாட்டில் இருந்து சுத்திகரித்து வரும் சமையல் எண்ணெய்களின் விலை அதிகமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி