இங்கிலாந்து பிரித்தானியாவின் லெய்செஸ்டர் நகரில் ஒரு பெண்ணை தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் கடத்திச் சென்றுள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி, லெய்செஸ்டர் நகரில் குடிபோதையில் ஒரு பெண்ணை அவர்கள் காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். மேலும், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி மூலம் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.