ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் இன்று (ஜன.17) வேட்புமனுத்தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் போட்டியிடுவது காலத்தின் கொடுமையாக உள்ளதாக கூறியுள்ளார்.