குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில், கொரோனாவுக்கு பின்னரும் ஆன்லைனில்தான் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அடிதடி வழக்கு ஒன்று ஆன்லைன் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமத் பேட்டரி என்ற முனுதாரரை நீதிபதி நிர்சார் எஸ்.தேசாய் ஆன்லைனில் விசாரித்தார். இதில் மனுதாரர் கழிவறையில் இருந்தபடியே தனது செல்போன் மூலம் ஆன்லைனில் விசாரணைக்கு ஆஜரானார். இது நேரடியாக ஆன்லைனில் ஒளிபரப்பானது. இந்நிலையில், கழிவறையில் இருந்தவாறு விசாரணைக்கு ஆஜரான அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.