கார் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து: இருவர் பலி

56பார்த்தது
கார் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து: இருவர் பலி
நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். திருச்செந்தூர் சென்று வந்த குஜராத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் பொலிரோ கார் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி