ஒரு மனிதனோ, ஒரு நிறுவனமோ தங்களுக்கு தேவையானவற்றை விலைகொடுத்து, பெற்று அனுபவிப்பதே 'நுகர்வு' ஆகும். நாட்டில் சாதாரண குடிமகன் முதல் ஜனாதிபதி வரை அனைவருமே நுகர்வோர் தான். சந்தைப்படுத்தப்படும் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துபவர்கள் நுகர்வோர் என வரைமுறை செய்யப்படுகிறார்கள். நுகர்வு செயல்பாடு என்பது அதைச் சார்ந்தவர், விற்பனையாளர் மற்றும் பொருளைச் சார்ந்திருக்கிறது.