தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பாஜகவிற்கு விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக பாஜகவிற்கு பொறுப்பாளர்களை நியமிக்க
பாஜக மாநில தலைவர்
அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். 10 நாட்களுக்குள் தொகுதி வாரியாக வேட்பாளர்களை அடையாளம் கண்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் நடந்த
பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. மேலும், தொகுதி வாரியாக சிறப்பாக செயல்படும்
பாஜக நிர்வாகிகள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு தேசிய தலைமையிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.