தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் இன்று (மார்ச் 22) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ள 7 மாநில பிரதிநிதிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பரிசுப் பெட்டகம் வழங்கப்படவுள்ளன. அதில், தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களான பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப் புடவை, ஊட்டி வர்க்கி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெற்றுள்ளன.