தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசிக்க சென்னையில் இன்று (மார்ச். 22) கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதில் பங்கேற்க ஏழு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் பங்கேற்காது என தெரிகிறது. அம்மாநிலத்தில் ஒரே மாதிரியான அடையாள அட்டை பிரச்னை உள்ள நிலையில் அதில் அவர் கவனம் செலுத்துகிறார்.