தொகுதிப் பங்கீடு - முதல்வர் இன்று ஆலோசனை

71745பார்த்தது
தொகுதிப் பங்கீடு - முதல்வர் இன்று ஆலோசனை
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், கொமதேக, ஐயூஎம்எல், மமக, தவாக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், கொமதேக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். தொகுதிப் பங்கீட்டில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

விசிக 3 தொகுதிகளும், மதிமுக 2 தொகுதிகளும், காங்கிரஸ் 10, மமக 1, தவாக 1 தொகுதிகளை கேட்டு வருகின்றன. இது குறித்து இன்று முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

உத்தேசமாக அமையும் தொகுதிப் பங்கீடு

திமுக - 21
காங்கிரஸ் - 7
விசிக - 2
மதிமுக - 1
சிபிஐ - 2
சிபிஎம் - 2
கொமதேக - 1
ஐயூஎம்எல் - 1
மமக - 1
தவாக - 1
மநீம - 1

தொடர்புடைய செய்தி