இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும்
போர் நடந்து வருவது தெரிந்ததே. இந்நிலையில், இன்று நடைபெற்ற
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிப்பதாக
காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதற்கான தீர்மானத்தை கட்சி எடுத்துள்ளது. மேலும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் குறித்து கவலை தெரிவித்தது. இரு பிரிவினரும் உடனடியாக
போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் எனவும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையே சிறந்த வழி என்றும்
காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளார்.