திருத்தணி அருகே அம்மையார்குப்பம் கிராமத்தில் காங்கிரஸ் பிரமுகர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (ஜூன்.10) நள்ளிரவு அடித்துக் கொல்லப்பட்டவர் ராஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டார். அவர் அம்மையார்குப்பம் பகுதி காங்கிரஸ் துணை தலைவராக இருந்தார். அண்மையில் தனது வீட்டிற்கு அருகில் கஞ்சா பயன்படுத்திய சில நபர்களை ராஜேந்திரன் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. போலீஸ் விசாரிக்கிறது.