துபாயில் நடைபெற்று வரும் 24 ஹவர்ஸ் கார் ரேஸில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார். நேற்று நடந்த ரேஸில் வெற்றிப் பெற்ற அஜித், அடுத்த சுற்றுக்குத் தேர்வானார். இந்நிலையில், அஜித்துக்கு வாழ்த்து கூறி சிவகார்த்திகேயன் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "உங்களின் அசைக்க முடியாத ஆர்வமும், அர்ப்பணிப்பும் எங்கள் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. இந்த கார் பந்தயத் தொடரிலும் நீங்கள் வெற்றிப் பெற எனது வாழ்த்துக்கள் அஜித் சார்" என குறிப்பிட்டுள்ளார்.