அரியலூர் பாமக மாவட்ட செயலாளர் யார்? என்பதில் குழப்பம்

73பார்த்தது
அரியலூர் பாமக மாவட்ட செயலாளர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராமதாசால் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட காடுவெட்டி ரவி தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தாம் தான் அரியலூர் மாவட்ட செயலாளர் என அன்புமணி ஆதரவாளர் தமிழ் மறவன் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இதனால் கட்சி தொண்டர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என காடுவெட்டி ரவி தரப்பினர் மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி