கேரளாவின் கொச்சியில் உள்ள களமசேரி பாலிடெக்னிக் விடுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 2 கிலோ கஞ்சா சிக்கியது. களமசேரி போலீசார் நேற்று இரவு விடுதிக்கு வந்தனர். அதிகாலை 3 மணி வரை நடந்த சோதனையில் விடுதியின் 2 அறைகளில் இருந்து இரண்டு பொட்டலங்களில் 1.909 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனுடன், மாணவர்களின் மேஜைகள், அலமாரிகளில் இருந்து மது பாட்டில்கள், சிகரெட், ஆணுறைகளை போலீசார் கண்டுபிடித்தனர். கஞ்சாவை சிறிய பொட்டலங்களில் வைத்து மாணவர்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.