பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க காவல்துறை அனுமதி அளித்த நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் கூட்டத்தை முடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், "அனுமதி அளித்த இடத்தில் மட்டுமே தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட வாகனத்தில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் தான் வர வேண்டும், பொதுமக்களை விஜய் சந்திக்க 2 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.