விழுப்புரம்: விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதித்து நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். கடந்த 3ஆம் இந்த சம்பவம் நடந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூவருக்கும் இன்று வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்தது.