இஸ்ரேல் இசை நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 260 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். நெகேவ் பகுதியில் பிரமாண்ட புத்தர் சிலையின் கீழே நடனமாடியவர்களுக்கு ஏற்பட்ட சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதிக்கான இசை நிகழ்ச்சி என்று மிக பிரபலமாக நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் இஸ்ரேல் மக்கள் தவிர பிற வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.
அமெரிக்கா ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.