இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட மேலை நாடுகளில் இளம் வயதினர் இடையே இ-சிகரெட் பழக்கம் என்பது அதிகரித்து வருகிறது. இதனால் பல இளைஞர்கள் புற்றுநோய், மரணம் போன்றவற்றை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தில் இன்று முதல் இ-சிகரெட் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இ-சிகரெட்டை தடை செய்தாலும், அதனை பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.