பண மோசடி செய்துவிட்டதாக தயாரிப்பாளர் சமீர் அலிகான் அளித்த புகார் தொடர்பாக இசையமைப்பாளர் சாம் சி.எஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஒரு படத்திற்கு இசையமைக்க என்னை சமீர் ஒப்பந்தம் செய்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்து இசை அமைக்க கோரினார். காலதாமதம் ஆகும் என கூறிய நிலையில் இதுபோன்று புகார் அளித்துள்ளார். காழ்ப்புணர்ச்சி காரணமாக தவறான வழியில் என்னிடமிருந்து பணம் பறிக்க சதித்திட்டம் தீட்டியுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.