2024-ம் ஆண்டு இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துவிட்டது. MI அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மாற்றப்பட்டு, ஹர்திக் நியமிக்கப்பட்டதை ரசிகர்கள் விரும்பவில்லை. இதனால் ரசிகர்கள் ஹர்திக்கை அதிகம் விமர்சித்தனர். தனது காதல் மனைவி நடாஷாவையும் இந்த ஆண்டு பிரிந்தார். 2024-ல் ஏமாற்றங்களையும், சோகங்களையும் எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியாவிற்கு 2025 நல்ல ஒரு ஆண்டாக அமையட்டும்.