திருச்சி சமயபுரம் பகுதியில் தனியார் கல்லூரி மாணவர் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (19). இவர் சமயபுரம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் விடுதியில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சமயபுரம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்பட்ட கடன் காரணமாக மகேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.