கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ், பிரகாஷ், அய்யனார் ஆகிய 3 நண்பர்களும் மது அருந்து சென்றுள்ளனர். அப்போது, பிரகாஷின் தங்கையை சுபாஷ் காதலித்து வந்தது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பிரகாஷ் மற்றும் அய்யனார் சேர்ந்து சுபாஷை தாக்கி குளத்தில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். இதையடுத்து, போலீசார், பிரகாஷ் மற்றும் சுபாஷை கைது செய்துள்ளனர்.