கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பொறியாளர்கள், வாயு கசிவு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். டேங்கர் லாரி விபத்து நடந்த இடத்திற்கு அருகில் 500 மீட்டர் சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜன., 03) விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.