இடிந்து விழுந்த கட்டிடம் - பரபரப்பு வீடியோ

52550பார்த்தது
உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள ஆர்யாநகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் இன்று இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும், உயிரிழப்பும் ஏற்படவில்லை. 3 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விபத்து ஏற்படாமல் இருக்க அருகில் உள்ள பகுதிகளை காலி செய்தனர். கட்டிடம் இடிந்து விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி