கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட கவர்கள் வாட்டர் பால்ஸ் சோலை குறுக்கு பகுதியில் இன்று சுற்றுலா பயணிகளின் வாகனத்தை விரட்டிய யானை. அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது மற்றும் அப்பகுதியில் ஒற்றை யானையின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் அச்சத்தில் இயங்கும் வாகனங்கள் வனத்துறையினர் அப்பகுதியில் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் மற்றும் எஸ்டேட் பொதுமக்கள் இன்று வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.