பாலியல் வழக்கை திரும்ப பெற கோரி பெண்ணுக்கு மிரட்டல்; வழக்கு

75பார்த்தது
பாலியல் வழக்கை திரும்ப பெற கோரி பெண்ணுக்கு மிரட்டல்; வழக்கு
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 48 வயது பெண். இவரது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முருகன் என்பவர் மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை முருகனின் மனைவி பானுப்பிரியா, தாய் சின்னம்மாள், சகோதரி பழனியம்மாள் ஆகியோர் வழக்கை வாபஸ் பெறும்படி அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் முருகனின் உறவினர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

டேக்ஸ் :